லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு!!
லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 146 ஐ கடந்துள்ளது.
இதில் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் பொதுமக்களும் அடங்கியுள்ள நிலையில், அவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் சரியாக வெளிபடுத்தப்படவில்லை.
2011 ஆம் ஆண்டு அல்-கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 444ஆம் படைப்பிரிவின் தளபதி முகமது ஹம்ஸா திரிபோலி விமான நிலையத்தில் வைத்து சிறப்பு தற்காப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மோதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.