;
Athirady Tamil News

வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு!!

0

சொந்த வீடு என்பது அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருமானத்தை பொறுத்து லட்சக்கணக்கில் வீடு மற்றும் தனிநபர், வர்த்தக கடன்களை வழங்கி வருகிறது. கடனுக்கான விதிமுறைகள் தெரியாமலேயே பலர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கடன்களை வாங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 முறை அதிகரித்தது. மொத்தம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சுலப மாத தவணை (இ.எம்.ஐ.)அடிப்படையில் மாறுபடும் வட்டி விகித்ததை கொண்ட வீட்டு கடன்களை பொறுத்தவரை வட்டி உயர்த்தப்படும் போதெல்லாம் மாத தவணையும் அதிகரிப்பது வழக்கம். ஆனால் நிலையான வட்டிவிகிதம் என்பது மாறாமல் இருக்கும். பெரும்பாலான வட்டி விகிதம் உயரும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் மாத தவணையை உயர்த்தியும், கடன் கால அளவை நீட்டித்தும் வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்து உள்ளது. தற்போது கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் முறையாக பின்பற்றாவிட்டால் அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதித்து அதை வட்டியோடு சேர்த்து விடுகிறது. இதனை தடுக்க புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகித்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், இ.எம்.ஐ உயர்த்துவது குறித்து முன்னமே வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிலவகை கடன்களுக்கு மாத தவணை தொகையை (இ.எம்.ஐ.) உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் புதிய விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் மாறுபட்ட வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறும் போது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும். பொதுவாக மாறுபடும் வட்டி விகிதத்தை விட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் நிலையான வட்டிக்கு மாறும் போது மாதாந்திர தவணை தொகை (இ.எம்.ஐ.) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.