வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் – மேலும் ஆதரவு வழங்கும் ஜேர்மனி !!
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட “Leopard 1” டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மன் தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த விடயமானது ரஷ்ய தரப்புக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜேர்மனியின் பயிற்சியின் நோக்கம், உக்ரைனிய துருப்புக்களுக்கு ஜேர்மன் வழங்கிய ஆயுதங்களை இராணுவ நடவடிக்கைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேர்ச்சி பெற வைப்பதாகும்.
இதற்கமைய நேற்றையதினம்(18.08.2023), ஜேர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள பயிற்சி மைதானத்தில் “Leopard 1” டாங்கிகளைப் பார்க்க ஜேர்மனிய ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில் 100 “Leopard 1” டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ,கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜேர்மன் படைகள் 6,000 உக்ரைனியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.