திருமண விழாவில் நடனமாடியபடி விருந்தினர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர்!!
ஆடம்பரமாக நடைபெறும் திருமண விழாக்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். கூட்ட நெரிசலில் விருந்தினர்களை வரிசைப்படுத்தி புகைப்படம் எடுப்பது போட்டோகிராபர்களுக்கு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் போட்டோகிராபர் ஒருவர் திருமண விழாவில் நடனமாடும் விருந்தினர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறார்.
அந்த திருமண விழாவில் பஞ்சாபி இசைக்கு ஏற்ப விருந்தினர்கள் நடனமாடுகின்றனர். அதனை வீடியோ எடுத்த போட்டோகிராபர், ஒரு கையால் தனது கேமிராவை பேலன்ஸ் செய்தபடி விருந்தினர்களின் நடனத்தை பதிவு செய்ததோடு, தானும் நடனமாடியபடியே வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.