கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு !!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை 15,000 பேரை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் வேகமாக பரவும் காட்டுத் தீயை அடுத்து மொத்தமாக 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், ‘கூட்டாட்சி உதவிக்கான பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோரிக்கையைப் பெற்று, அதற்கு அனுமதி அளித்துள்ளோம்.
நாங்கள் கனேடிய ஆயுதப்படைகளின் பிற தளபாடப் பணிகளுக்கு உதவ ஆதாரங்களை வழங்குதல், வெளியேற்றங்கள் ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறோம். தேவையான ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து இங்கு இருப்போம்’ என தெரிவித்துள்ளார்.