நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை பொருட்டு 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவில் மொத்தம் 8,30,000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மட்டுமே பாவனைக்கு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சுதர்ஷி விதானபத்திரன தெரிவித்தார்.
27% நீரே பயன்பாட்டிற்கு சாத்தியமானது என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மொத்த நீர்த்தேக்கங்களில் 62 நீர்த்தேங்களின் கொள்ளளவு 502 வீதத்திற்கும் குறைவானதெனவும் அம்பாந்தோட்டை,அநுராதபுரம்,குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள 14 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 10 வீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலவும் ஆபத்துமிக்க வறட்சி நிலைமையின் காரணமாக நீரை சிக்கனமாக உபயோகிக்குமாறு பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.