ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது !
முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைது செய்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய, புத்கமுவ வீதியைச் சேர்ந்த நபரே ருமேனியாவில் தொழில் வழங்குவதற்காக 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், அவர் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக பணியகத்துக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.