அண்டா, அண்டாவாக வீணான உணவு: நிர்வாகிகளின் அலட்சியம் என தொண்டர்கள் குமுறல்!!
மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது.
பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது. இதற்கிடையே மூன்று கூடங்களில் ஏராளமான உணவுகள் (சுமார் 40 அண்டா) கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிமுக தொண்டர் ஒருவர் மனக்குமுறலுடன் தெரிவிக்கையில் ”மேலிடம் நல்ல சாப்பாடு போடச் சொன்ன பிறகும், மாஸ்டர்கள் சரியில்லாமல் போனதால், சாப்பிடு சரியில்லை.
சாப்பாட்டில் பூசணம் பூத்துள்ளது, 100 அண்டா சோறு அப்படியே உள்ளது. யார் சாப்பிடுவார்கள். வாயில் வைத்தால் ஒன்றுமே இல்லை” என்றார் தலைமை சரியாக செயல்பட சொன்ன பிறகும், நிர்வாகிகளின் மோசமான செயல்பாடுகளால், உணவுகள் இருந்தும், தொண்டர்கள் சாப்பிட முடியாது நிலை ஏற்பட்டது.