தென்ஆப்பிரிக்கா பயணத்தை தொடர்ந்து கிரீஸ் செல்கிறார் பிரதமர் மோடி!!
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார். இன்று முதல் 24-ந்தேதி வரை இந்த சுற்றுப் பயணம் மூன்று நாட்கள் கொண்டது. தென்ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பின் பேரின் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில பல நாட்டின் பிரதமர்கள் மற்றும் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்து, அங்கிருந்து கிரீஸ் செல்கிறார். கிரீஸ் பிரதமர் அழைப்பின்பேரின் வருகிற 25-ந்தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைகிறார். மிகவும் தொன்மையான நிலத்திற்கு முதல் முறையாக செல்ல இருக்கிறார். மேலும், 40 வருடத்திற்குப் பிறகு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.