கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!
கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 100 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்புடைய பண மோசடி வழக்கில் சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வங்கியில் ஏழை மக்களின் சொத்துக்களை அவர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து, அதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவில் கடன் பெற்றதாகவும், இதன் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பண மோடி நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கருகிறது. இதன்அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொய்தீன் வலியுறுத்தலின்படி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பினாமி பெயர்களில் கடன் பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுகிறது.