;
Athirady Tamil News

கனடா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை !!

0

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட சர்வதேச மாணவர்களின் வருகையே காரணம் எனவும் எனவே அவர்களின் வருகையை கட்டப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் இலாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், தற்போதைய உள்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருகிறார்.

அண்மைய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே, அதை சமாளிக்கும் வகையில் அரசு திட்டமிட்டுவருகிறது.

கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார்.

அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது. ஆகவே வரும் நாட்களில் சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு சிக்கல்கள் அல்லது குறைந்தபட்சம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரியவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.