;
Athirady Tamil News

அமைச்சரை கடுமையாக சாடும் இராஜாங்க அமைச்சர் !!

0

துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தன்னை தன் கடமைகளை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சின் விவகாரங்களை முன்னெடுக்க இராஜாங்க அமைச்சரின் உதவிகளைப் பெற வேண்டியது அவசியமானதென நேற்றைய தினம் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

“திட்டங்களை நடைமுறைப்படுத்த பல முதலீட்டாளர்களை நாங்கள் அழைத்து வந்தபோது பல இடையூறுகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க நேரிட்டது. அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரின் கட்டளைகளுக்கமைய மட்டுமே செயற்படுவதும் இராஜாங்க அமைச்சரை அலட்சியப்படுத்துவதையுமே இச்செயல்கள் காட்டுகின்றன.

அமைச்சிலுள்ள மூத்த ஊழியர் குழுவொன்று தான் இவ்வாறு செயற்படுகின்றது” என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்த பல முதலீட்டாளர்கள் புறமுதுகு காட்டியதற்கு காரணம் அவர்கள் தமது வர்த்தகத்தை ஆரம்பிக்க முயற்சித்த போது பல அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தமையே இதற்கு காரணமாகும்.

அமைச்சின் அதிகாரிகள் முதலீட்டாளர்களிடம் இருந்து தரகுப் பணம் பெற முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய இராஜாங்க அமைச்சர் ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் தனது கடமைகளுக்கு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏன் இடையூறு செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் நீடித்து அரசாங்கப் பணத்தை வீணடிக்காமல் தான் பதவி விலகுவது சிறந்தது எனத் தெரிவித்ததுடன் , இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.