உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொள்ளும் இந்தியா !!
உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது ஆய்வை தொடங்கியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, இன்று(23) மாலை 6:04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
சுமார், 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 அதன் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன.
இதனால் இஸ்ரோ ஆய்வு மையம், பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது. அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி, மிகவும் குளிரான வானிலையில், லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்துள்ளது.
இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டது.
அத்துடன், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிப் பயணத்தில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
மேலும், கடந்த முறை அனுப்பப்பட்ட சந்திரயான் இரண்டின் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது தொடர்பை இழந்து சிதறியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய 2 கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கியுள்ளது.
இதில் செய்யப்பட சோதனையின் அடிப்படையில்தான் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு, தற்போது நிலவில் இறங்கியுள்ளது.
இந்த செயல் கடைசி 7 நிமிடத்தில் நடந்துள்ளது. இந்த 7 நிமிடங்களை விஞ்ஞானிகள் ‛7 மினிட்ஸ் ஆஃப் டெரர் (Seven Minutes of Terror) என அழைக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேல்பகுதியில் மிதக்கும் என்று கூறப்பட்டுள்ளது.