வனப் பாதுகாப்புக்கான வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்- அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது!!
வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் வனப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் உயர் அலுவலர்கள் தங்களது துறையில் வனப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தான முன்னேற்ற அறிக்கையின் விவரத்தினை விளக்கி கூறினார்கள்.
அதனைக் கேட்டறிந்த அமைச்சர் மதிவேந்தன், முதலமைச்சரின் முகவரி சார்ந்த மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண தேவையான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மானியக் கோரிக்கை அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் முஹபத்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுதாநாஷீ குப்தா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.