நிலவில் இந்தியா நடைபயணம்: அப்டேட் விரைவில்…! இஸ்ரோ டுவீட்!!
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்த நிலையில், “நிலவின் தென்துருவத்தில் இந்தியா (பிரக்யான் ரோவர்) நடைபயணம் செய்தது. விரைவான அப்டேட் விரைவில்” என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. இதன்மூலம் முதன்முதலாக ரோவர் எடுக்கும் நிலவின் படத்தை வெளியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. ரோவர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.