இந்தியாவில் 3 இலங்கையர்கள் கைது !!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று இலங்கைப் பிரஜைகளை பெங்களூர் பொலிஸின் மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
இந்திய ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில், குறித்த மூவருக்கும் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்குப் பெற்றுக் கொடுத்த இந்திய நாட்டவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.