;
Athirady Tamil News

பெரும் சம்பள நிலுவையுடன் நாடு திரும்பிய பெண் !!

0

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற பெண்ணே இன்று (24) நாட்டை வந்தடைந்தார்.

46 வயதான ஜெனிட்டா என்ற காலியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மிகப் பெரிய சம்பளப் பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக குவைத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த நாட்டில் பாடசாலை ஆசிரியையான பெண் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இவர் ,எஜமானியால் பலத்த துன்புறுத்துக்கு உள்ளாகினார்.

‘அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பார். எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை’. என ஜெனிட்டா தெரிவித்தார்.

இதுபற்றி தனது தாயிடம் ஜெனிட்டா தெரிவித்ததையடுத்து, 02.02.2022 அன்று அவரின் தாய் கொழும்பு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார் என அவர் தெரிவித்தார்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இது குறித்து முறையிடப்பட்டதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டுப் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தனர்.

அப்போதும் குறித்த வீட்டிலேயே ஜெனிட்டா பணி புரிந்து வந்ததால் வீட்டின் உரிமையாளரை அந்நாட்டு பொலிஸார் அழைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

அந்த வீட்டில் 3 வருடங்களும் 8 மாதங்களும் பணியாற்றிய ஜெனிட்டாவுக்கு ஒரு வருடமும் 3 மாதத்துக்குமான சம்பளமே வழங்கப்பட்டிருந்தது.

பின்னர், இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை அப்பகுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, மீதமுள்ள சம்பள நிலுவையை வழங்க வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதுவரை ஜெனிட்டா டெலிகா இலங்கை தூதரகத்துடன் இணைந்த வரவேற்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் தனக்கான நிலுவைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.