அதிகரித்துள்ள வெப்பம்… இன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பமானது குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேலும் செறிவான அளவில் இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் போதுமானளவு நீரை பருகுவதுடன், ஓய்வாக இருப்பதுடன், குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டுச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப காலநிலையினை சமாளிப்பதற்கு மக்கள் வெள்ளை அல்லது இளம் நிறங்களில் ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.