;
Athirady Tamil News

சீனா, தென்கொரியா எதிர்ப்பை மீறி புகுஷிமா அணுஉலை கதிரியக்க கழிவுநீர் கடலில் கலப்பு!!

0

ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டது. ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் அணுஉலையின் 3 வினையூக்கிகள் உருகத் தொடங்கின. இதனைக் கட்டுப்படுத்த கடல் நீர், போரிக் ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடல் நீர் கதிரியக்க கழிவு நீராக மாறியது. இதனை சுத்திகரித்து பசிபிக் கடலில் வெளியேற்ற ஜப்பான் முயற்சி மேற்கொண்டது.

இதற்காக அவற்றை சுத்திகரித்து பேரல்களில் சேமித்து வைத்தது. இவற்றில் 31,200 டன் கழிவுநீரை அதாவது 10 பேரல்களில் உள்ளவற்றை வரும் 2024 மார்ச் மாதத்துக்குள் கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்தது. இதனால் உள்நாட்டு மீன்வளம் பாதிக்கப்படும் என்று ஜப்பான் நாடு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், கழிவுநீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது. இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீர் விரைவில் வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதன் ஒருபகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீர் நேற்று பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது. சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் இதனை அரசியல் விவகாரமாக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து நேரடி காணொலி மூலம் கழிவுநீர் திறந்து விடப்படும் காட்சியை டெப்கோ நிறுவனம் வெளியிட்டது.

* ஜப்பான் கடல் உணவுக்கு சீனா தடை
சீனா வெளியுறவு துறை செயலர் வாங்க்வென்பின், ‘’பசிபிக் கடலில் அணு கழிவுநீரை திறந்து விட்டிருப்பது பொறுப்பற்ற செயல். இதனால், ஜப்பான் கடல் உணவு வகைகள் மற்றும் தாவரங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளோம்,’’ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.