சூரியனை நோக்கி திரும்பிய பிரக்யான் ரோவரின் சோலார் பேனல்!!
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் இறங்கிய பிறகு அதன் செயல்பாட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த ரோவர் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரின் செயல்பாட்டிற்கு சூரிய ஆற்றல் முக்கியம் என்பதால், அது வெளிவந்த பிறகு சோலார் பேனலின் தகடு சூரியனை நோக்கி திரும்பியது. மேலும், சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் அளவித்துள்ளது.