ஒன்பது நாடுகளுக்கிடையேயான நேரடி விமான சேவையினை ஆரம்பித்துள்ள சீனா !!
சீனாவின் வூகான் நகரில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 88 சதவீதத்தையும், அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தையும் எட்டியுள்ள நிலையில், இந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட நேரடி விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவில் இருந்து துபாய், ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையேயான 9 விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக சீன விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
2019-ல் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகையே ஆட்டி படைத்தது. எனவே கொரோனா பரவுவதை தடுப்பதற்காக பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது.
குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் தற்போது அதன் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதன்காரணமாக ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள் தங்களது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளன.