;
Athirady Tamil News

வணிக வளாகத்தில் பெண்ணிடம் காதலை முன்மொழிந்த வாலிபர்- மோதிரம் அணிவித்த வீடியோ வைரல்!!

0

கடிதங்கள் மூலம் காதலை தெரிவித்த காலம் மலையேறி விட்டது. தற்போது சிறப்பு பரிசுகளுடன், அழகான இடங்களை தனது மனம் கவர்ந்த இணையிடம் காதலை தெரிவிப்பதும், அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் கூட்டம் நிறைந்த வணிக வளாகம் ஒன்றில் தனது காதலியிடம் காதலை முன்மொழிந்த காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது. பிரியன்ஷி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் செல்கிறார்.

அந்த பெண்ணை நோக்கி சென்ற வாலிபர் தனது காதலி தன்னை பார்க்கும் போது கையில் ஒரு மோதிரத்துடன் காதலி முன்பு முழங்காலிட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிகிறார். இதை பார்த்த இளம்பெண் திகைத்து போனதோடு, மகிழ்ச்சியில் சிரிக்கிறார். அப்போது அந்த வாலிபர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 94 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 7 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.