இந்தியாவின் அதிரடி முடிவு- வெளிநாடுகளில் ஏற்படவுள்ள தாக்கம் !!
இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ஏற்கனவே வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க கிலோ ஒன்றுக்கு ஏற்றுமதி வரியாக ரூபா 40 ஐ விதித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் அமெரிக்கா,கனடா உட்பட்ட நாடுகளில் அரிசி கிடைக்காமல் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அரிசி வாங்கிச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
இந்த வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரிக்கும் என்றும் இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறையும் என்றும் வெளிநாட்டில் புழுங்கல் அரிசியின் விலை தாறுமாறாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.