திருப்பதியில் விடிய விடிய பலத்த மழை- பக்தர்கள் அவதி!!
திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் குளிர் காற்று வீசியது. தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் குளிரில் அவதி அடைந்தனர்.
இன்று அதிகாலை மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். திருப்பதியில் நேற்று 71,0 73 பேர் தரிசனம் செய்தனர். 37,215 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.