பிரமிட் மோசடியாளர்களுக்கு சிக்கல் !!
இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரமிட் திட்டங்களின் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகைய மோசடி திட்டங்களுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன.
தனிநபர்கள் உட்பட நிறுவனங்கள் என பிரமிட் திட்ட மோசடிகளில் ஈடுபடும் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பிரமிட் திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முனைகிறது.
இந்த நடவடிக்கையானது நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் நிதித்துறையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் மேற்கொள்ளும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.