கே.சி.ஆர். ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – பொதுக்கூட்டத்தில் சீறிய அமித் ஷா!!
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை வெளியேற்றி, பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி இருக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி குடும்பத்தையும், பி.ஆர்.எஸ். கட்சி கல்வகுன்ட்லா குடும்பத்திற்கும் சேவையாற்றி வருகின்றன. வரவிருக்கும் தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை தழுவும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். விரைவில் தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். மக்கள் கே சந்திரசேகர ராவ் ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இதனால் அடுத்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவுவார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதோடு காங்கிரஸ் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியை ஒப்பிட்டு, விவசாயிகளுக்கு அதிக நன்மை ஏற்படுத்தியது பா.ஜ.க. ஆட்சி தான் என்று பல்வேறு நலத்திட்டங்களை அமித் ஷா எடுத்துரைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில், மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை மந்திரி ஜி. கிஷன் ரெட்டி, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பண்டி சஞ்சய் குமார், எம்.பி., பா.ஜ.க. ஒ.பி.சி. மோர்சா தேசிய தலைவர் டாக்டர் கே. லக்ஷமன், எம்.பி., டி.கே. அருணா, பா.ஜ.க. தேசிய துணை தலைவவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.