ஜேம்ஸ் டேலரின் சிலைக்கு முன் பிரகடனம்!!
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு உரிமைகள் எவையும் கிடைக்கவில்லை. தங்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான பிரகடனம் சனிக்கிழமை (26) செய்யப்பட்டது.
லூல்கந்துரை தோட்டத்தில் அமைந்துள்ள முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்த ஜேம்ஸ் டேலர் உருவச்சிலை முன்னிலையில் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை, மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாடு செய்திருந்தது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் கலாநிதி பீ.பீ.சிவபிரகாசத்தின் தலைமையில் இவ் வைபவங்கள் இடம் பெற்றன.
தேயிலை தோட்டத்தை முதன் முதலாக ஆரும்பித்த லூல்கந்துர தோட்டத்தில் அமைந்துள்ள ஜேம்ஸ் டேலரின் உருவச்சிலைக்கு முன்பாக ஒன்று கூடிய நூற்றுக்கனக்கான மலையக மக்கள், 200 வருடங்களாக தமக்கு கிடைக்காத உரிமைகளை எதிர்வரும் 10 வருடங்களில் பெற்றுக் கொள்வதற்கான பிரகடனம் ஒன்றை செய்தனர். அதன் பின்னர் ஊர்வலம் ஒன்றையும் நடாத்தினர்.