இந்து அமைப்பு ஊர்வலம் அறிவிப்பு எதிரொலி: பாதுபாப்பு வளையத்தில் “நூ”- பள்ளி, வங்கிகள் மூடல்!!
அரியானா மாநிலம் “நூ”-வில் இன்று இந்து அமைப்பினர் ஷோப யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்தனர். இதற்கு “நூ” நிர்வாகம் அனுமதி மறுத்த போதிலும் யாத்திரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜி20 மாநாட்டின் ஷெர்பா குரூப் கூட்டம் “நூ”-வில் செப்டம்ர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,900 அரியானா மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் 23 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியாட்கள் “நூ” பகுதிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன. செல்போன் இணையதளம், மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குர்கானில் உள்ள சோனா சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் “நூ” பகுதியில் கடந்த ஜூலை 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் நடத்தி ஊர்வலத்தின்போது, வன்முறை ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதனால் ஊர்வலம் பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை தொடர்வதாக கிராபசபை பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இன்று ஊர்வலத்தை தொடர் முடிவு செய்யப்பட்டது.