லுசாகா விமான நிலையத்தில் மில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் !!
சாம்பியாவின் தலைநகர் லுசாகாவில் 5 மில்லியன் டொலர் பணம், போலி தங்கம், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் தனியார் விமானம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விமானம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து சாம்பியாவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எகிப்து அல்லது சாம்பியாவில் யாரும் விமானத்தை வாடகைக்கு எடுத்ததையோ அல்லது சொந்தமாக வைத்திருப்பதையோ இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், மேற்படி விமானம் குறித்து தற்போது பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
விமானம் மற்றும் அதன் சரக்குகளில் ஈடுபட்டவர்கள் உயர்மட்ட எகிப்திய அல்லது சாம்பிய அரசியல் அல்லது இராணுவ பிரமுகர்களாக இருக்கலாம் எனவும் வதந்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இவ்விமானம் முதல் விமானமா அல்லது இரண்டாவது விமானமா என்பது குறித்தும் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த ஆறு எகிப்தியர்களும், லுசாகா விமான நிலையத்தில் அவர்களுடன் இணைந்த ஏனையவர்களும் இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுதப்படவுள்ளனர்.