;
Athirady Tamil News

ஜி 20 மாநாடு நடைபெறும் போது ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்- 5 நாட்கள் பயணம்!!

0

ஜி 20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், நார்வேக்கு செல்கிறார்.

செப்டம்பர் 7-ந் தேதி அவர் பாரீஸ் செல்கிறார். அங்கிருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அவர் பாரீஸ் நகரில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். 9-ந் தேதி பாரீசில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 10-ந் தேதி ராகுல்காந்தி நார்வே செல்கிறார். அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார். அதோடு நிருபர்களையும் சந்திக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.