ஜி 20 மாநாட்டில் சீன அதிபருக்கு விருந்தளிப்பது சரியானதா? காங்கிரஸ் கேள்வி!!
சீனா ஆண்டுதோறும் புதிய வரைபடத்தை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள இந்த வரைபடம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இது தொடர்பாக கூறியதாவது:- சீனாவின் புதிய வரைபடம் அபத்தமானது.
இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய நிலப்பரப்பில் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சட்ட விரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின் பிங்க் வருகை தருகிறார். அவருக்கு விருந்தளிப்பது சரியானதா? என்பதை நரேந்திர மோடி அரசு சுய பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.