குலசேகரப்பட்டின ஏவுதளத்தை கண்காணிக்க சீனக்கலம் !!
இந்தியாவின் விண்வெளி ஏவுதளத்தில் குலசேகரப்பட்டினம் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளது.
இதன் பின்னணியில் அதற்கு அருகில் சீனக் கலங்கள் இலங்கையை மையப்படுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை என்பது தெரிகிறது.
இதனால் தான் சீனாவின் ஷி யான் 6 கப்பலின் வருகை புதிய சிக்கலை உருவாக்கிக் கொள்கிறது.
சந்திராயன் – 3 வெற்றியால் இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் டொலரை எதிர்வரும் ஆண்டுகளில் எட்டிவிடும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருக்கும் நிலையில், தமிழகத்தின் குலசேகரப்பட்டின எவுதளத்தை டெல்லி பெரும் எதிர்கால முதலீடாக நோக்குவதால் அருகில் சீனக் கலங்கள் வருவது அதற்கு உறுத்தலை ஏற்படுத்துவது புரிதலுக்குரியது.
இதனால் தான் சீனக் கலங்கள் இலங்கையை நெருங்கும் போதெல்லாம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறிய உரசல்களும் அதனை தணிப்பதற்காக இலங்கை சில சமரசங்களை வழங்கும் நகர்வுகள் வெளிப்படுவது தெரிகிறது.