காலநிலை மாற்றம் மோதல்களை அதிகரிக்க வழிவகுக்கும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை !!
காலநிலை மாற்றம் தொடர்பிலான முக்கியமான அறிவித்தல் ஒன்றினை சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதாவது, 2060ம் ஆண்டிற்குள் பலவீனமான நிலையில் உள்ள நாடுகளில் மோதல்களால் மரணங்கள் பத்துவீதத்தினால் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் 50 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கையில்,
“காலநிலை மாற்றம் மோதலின் பிடியில் சிக்குண்டுள்ள நாடுகளிலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படும் நாடுகளிலும் மேலும் மோதல்களை உருவாக்கும்.
இதன் காரணமாக உயிரிழப்புகள் மரணங்கள் அதிகரிக்கலாம், அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடையும்.
காலநிலை அதிர்ச்சிகள் மோதல்களை உருவாக்குவதில்லை ஆனால் அவை ஏற்கனவே காணப்படும் அமைதியின்மையை மேலும் மோசமானதாக்குகின்றன.
வறுமை பட்டினி போன்றவற்றையும் அதிகரிக்கின்றன” என எச்சரிக்கை விடுத்துள்ளது.