திருமணம் செய்யும் பெண்களுக்கு பணப்பரிசு – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சீனா !!
சீனாவில் அதிகரித்துச் செல்லும் பிறப்புவீத குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை தொடங்கியுள்ளது.
இதன்படி சரியான வயதில் திருமணம் செய்யும் பெண்களுக்கு பணப்பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு.
மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த சீனாவில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு குழந்தை பிறப்பு வீதம் குறைந்துள்ளது.இதனால் சனத்தொகையில் முதலிடம் என்ற நிலையை கூட இந்தியாவிடம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அதிகரித்துச் செல்லும் பொருளாதார நெருக்கடியால் குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, கல்வி என குழந்தையை மையமாகக் கொண்ட செலவினங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் அங்கு குழந்தை பிறப்பு வீதம் வெகுவாக சரிவைக்கண்டுள்ளது. இதனையடுத்தே சீனா இந்த பணப்பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.