;
Athirady Tamil News

ஆசிரியர் பற்றாக்குறையை ஆசிரியர் தேர்வு நடத்தி விரைவில் சரி செய்யப்படும் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்!!

0

பொன்னேரி மீஞ்சூர் அரசு பள்ளி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். விடுதியில் வருகை பதிவேடு உணவு பொருள் இருப்பு விவரங்கள் உணவுபட்டியல் மாணவர்கள் சேர்க்கை சமையலறை தங்குமிடம் போன்றவற்றை முறையாக பார்த்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது மாணவர்கள் தங்களின் துணிகளை துவைக்க கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு மின்சலவை இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கவேண்டும். தமிழ் நாளிதழ்கள் படிப்பதற்கு கொடுப்பதை போன்று ஆங்கில நாளிதழ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:- ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் தேவை ஏற்பட்டால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து கல்லூரி பள்ளிமாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் உயர் நிலைபள்ளிக்கும் நடுநிலை பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிவர்த்தி செய்வதாகவும் விரைவில் தேர்வின் மூலம் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது தாசில்தார் மதியழகன் நகர மன்ற தலைவர் பரிமளம்விஸ்வநாதன் சேர்மன் ரவி காப்பாளர் அன்பழகன், நகரச் செயலாளர் ரவிக்குமார், ஒப்பந்ததாரர் ஆசானபுதூர் சம்பத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், சுகுமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் நேதாஜி, முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன் மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், ஆதிதிராவிடநலக்குழு அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத் , துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.