வானில் நிகழ்ந்த அரிய நிகழ்வு -பார்வையிட முண்டியடித்த மக்கள்!!
வானில் ஏற்பட்ட அரிய நிகழ்வை உலகெங்கிலும் வாழும் மக்கள் கண்டு களித்தனர்.
ஆம் அதுதான் ‘புளு மூன்’ என்ற அரியகாட்சியாகும்.
நேற்று இரவு 6.25 தொடங்கி 7.25 வரை சுமார் ஒரு மணிநேரம் இந்த ‘புளு மூன்’ காட்சியை மக்கள் கண்டு களித்தனர்.
Super Blue Moon என்பது சுப்பர் நிலவு (Super Moon) மற்றும் நீல நிலவு (Blue Moon) ஆகிய இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நிகழ்வதைக் குறிக்கிறது.
நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இதனை Super Moon என்கின்றனர். Blue Moon என்பது ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழு நிலவு.
நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழு நிலவாக அமைந்து விட்டால், அது Super Blue Moon என்று அழைக்கப்படுகிறது.
ஓராண்டுக்கு மொத்தம் 12 முழு நிலவுகள். 168 முழு நிலவுகள் நடந்தால் தான் ஒரு ‘Super Blue Moon’ நிகழும் என்பதால் இதனை அரிதான நிகழ்வு என்கின்றனர்.
எனினும், Blue Moon-க்கும் நீல நிறத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.