பெண்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு!!
50 நாடுகளில் நடத்தப்பட்ட 15 ஆய்வின்படி இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என கண்டறியப்பட்டுள்ளது. வாந்தி, தாடை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மருத்துவர்களால் அல்லது நோயாளிகளால் கவனிக்கப்படாமல் விட்டால் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு தாமதமாகிறது.
35 முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அறிகுறிகள் தோன்றிய பிறகு பெண்கள் ஆண்களை விட தாமதமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். மேலும் ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் பெண்களை மருத்துவமனையில் மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை.