நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான்..! சந்திரயான் -3 இன் அடுத்த வெற்றி !!
நிலவில் தென் துருவத்தில் ஓட்சிசன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்ததையடுத்து தற்போது கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலாமானது அனுப்பப்பட்டது.
இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் திகதியன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அது தரையிறங்கியதை அடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சின்னத்தை பதித்து தனது ஆராய்ச்சியை தொடங்கியது.
இந்நிலையில் நிலவில் ஓட்சிசன் இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று நிலவில் கந்தகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதியன்று நிலவில் கந்தகம் இருப்பதாக கண்டுப்பிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அலுமினயம், கல்சியம் உள்ளிட்ட பல உலோக பொருட்கள் நிலவில் இருப்பதாக பிரக்யான் ரோவர் கண்டுப்பிடித்துள்ளது. ஆல்பா எக்ஸ் – ரே துகள்கள் மூலம் நடத்திய சோதனையின் அடிப்படையில் கந்தகம் இருப்பதை பிரக்யான் கண்டறிந்துள்ளது.
இது நிலவில் எரிமலை வெடிப்பு மற்றும் விண்கல் மோதல் காரணமாக கந்தகம் உருவாகியுள்ளதா என்று இஸ்ரோ ஆராச்சி செய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிலவின் தென் பகுதியில் வேறு பல கனியங்கள் இருப்பதை உறுதி செய்து வருவதாகவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அலுமினியம், சல்பர், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம் தனிமங்கள் மற்றும் மாங்கனீசு,சிலிக்கன் ஓட்சிசன் இருப்பதை உறுதி செய்ததையடுத்து, ஹைட்ரஜன் இருப்பதை உறுதி செய்து வருவதாகவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.