;
Athirady Tamil News

நான் உயிருடன் இருக்கிறேன்- ரஷிய வாக்னர் குழு தலைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

0

ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷியா அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. ரஷியாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட வெண்கெனி பிரிகோஷின் காரில் சென்றபடி பேசுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறுவது போல வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வீடியோவில் அவர் பேசுவது உண்மைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா?அல்லது இறந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இந்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.