நிலவில் நிலநடுக்கம் – கண்டறிந்தது பிரக்யான் ரோவர் !!
நிலவில் நிலநடுக்கம் இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
விக்ரம் லேண்டரில் இருந்து கீழிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் பல ஆய்வுகள் மேற்கொண்டு, தனிமங்களை கண்டறிந்து வருகிறது. அதன்படி, நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ள நிலையில் இன்று பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியும் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது.
நிலவில் நிலநடுக்கம்
அதன்பின்னர், தென்துருவத்தின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, பூமியில் உள்ளது போன்று நிலவில் இயற்கையாக ஏற்பட்ட நில அதிர்வுகள் இருப்பதை விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ(ILSA) கருவி கண்டறிந்துள்ளது. மேலும், நிலவில் ஏற்பட்ட அதிர்வுகள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.