;
Athirady Tamil News

உலகில் இரவில் ஒளிரும் அற்புதமான இடங்கள் பற்றி தெரியுமா..! !

0

சில சுற்றுலா தளங்கள் இருட்டில் ஒளிரக்கூடிய தன்மை கொண்டது. அந்த அழகை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இருட்டும் வரை காத்திருப்பார்களாம்.

அத்தகைய வியக்கத்தக்க இடங்கள் பற்றி இப்பதிவின் ஊடாக பார்க்கலாம்.

வாதோ தீவு

வாதோ தீவின் கடற்கரைகள் உயிர் ஒளிர்வு(பயோ லுமினன்ஸ்) உயிரினங்களுக்கு பிரபலமானவை. இவை தண்ணீரில் நீள ஒளியை உருவாக்குவதால் இருட்டில் பிரகாசமாக காட்சியளிக்கக்கூடும்.

ஸ்பிரிங்ப்ரூக் பார்க்

இது உயிர் ஒளிர்வு உயிரினங்களை காண சிறந்த இடங்களில் ஒன்றாகும். இப்பூங்காவிற்கு இரவு நேரத்தில் செல்ல விரும்பினால், மிகவும் அற்புதமான காட்சியை காண முடியும்.

வைடோமோ குகை

நியூசிலாந்தில் உள்ள வைடோமோ குகைகளின் சுவர்களில் சிறிய க்ளோவ் வோர்ம் நிறைந்து காணப்படுகின்றன.

இவை இரவு நேரத்தில் குகையை ஒளிர செய்கிறது.

உனாய் பூங்கா

ஒகயாமாவில் உள்ள உனாய் போன்ற பல பூங்காக்கள் மின்மினிப் பூச்சிகளின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இப்பகுதிகளுக்கு மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் சென்றால், மின்மினிப் பூச்சிகள் நடனமாடும் அற்புதமான காட்சியை காண முடியும்.

இஸ்லா ஹோல்பாக்ஸ் தீவு

இஸ்லா ஹோல்பாக்ஸ் தீவை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் உயிர் ஒளிர்வு உயிரினங்கள் உள்ளது. அது தண்ணீரில் நீல ஒளியை உருவாக்கும்.

மனஸ்குவான் கடற்கரை

நியூ ஜெர்சியில் உள்ள இந்த மனஸ்குவான் கடற்கரையில், சர்ஃபிங் மற்றும் ராஃப்டிங் செய்வதற்கு சிறந்த இடமாகும்.

அதேநேரம், இரவில் சிவப்பு நிற பாசிகளால் கடல் இலைகள் சிவப்பாக காட்சியளிக்கக்கூடும்.

ரனோமஃபனா தேசிய பூங்கா

ரனோமஃபனா தேசிய பூங்காவில், ஒளிரும் காளானை காண முடியும். வனப்பகுதியில் காணப்படும் பல அசாதாரண பூஞ்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒளிரும் காளானால் பூங்கா இரவில் ஜொலிக்கக்கூடும்.

துசான் கடற்கரை

மலேசியாவில் மிரி நகரிலுள்ள துசான் கடற்கரை டினோவ்லக்லஸ்ட் (dinoflagellates) எனப்படும் ஆல்காவால் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்.

இதை உள்ளூர்வாசிகள் ப்ளு டியர்ஸ் என அழைக்கின்றனர். இது கட்டாயம் பார்க்க வேண்டிய பகுதியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.