;
Athirady Tamil News

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

0

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.

7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வரட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.

மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.

பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.

தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.