;
Athirady Tamil News

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் வீரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

0

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில், இந்த ஆறு பேரின் வாழ்க்கை முறை மட்டும் தலைகீழாக உள்ளது.

ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கி.மீ உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் அந்த ஆறு பேரைத்தான் சொல்கிறோம்.

இந்த ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் பூமியில் நாம் வாழும் வாழ்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் என்ன சாப்பிடுவார்கள்? எப்படி தூங்குவார்கள்? அவர்களது தினசரி வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று வேலை செய்யும் சூழலில் பாதுகாப்பு கருதி இரண்டு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

சர்வதேச விண்வெளி மையத்தில் தூங்குவதற்கு என பிரத்யேகமான ஒரு பை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பைக்குள் சென்று அடங்கும் விண்வெளி வீரர்கள், இரவு முழுவதும் அதில் மிதந்துகொண்டே தூங்குகிறார்கள்.

காலை ஆறு மணிக்குத் தானாக எறியும் மின்விளக்குகளை சமிக்ஞையாகக் கொண்டு கண் விழிக்கிறார்கள். தூங்கி எழுந்தவுடன் கழிவறைக்குச் செல்வது, பல் துலக்குவது என இவர்களது அன்றாட செயல்பாடுகள் பூமியில் உள்ள மக்களை ஒத்துக் காணப்படுகிறது.

ஆனால், அதற்கான டூத் பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வீரர்கள், அவற்றின் வேலை முடிந்ததும் அந்தரத்தில் அப்படியே விட்டுவிடுவார்கள். அவை ஓரிடத்தில் மிதந்துகொண்டே இருக்கும்.

அதற்கு அடுத்ததாக காலை உணவை முடித்துவிட்டு, விண்வெளி மையத்தின் கீழ் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் குறித்துத் திட்டமிடும் சந்திப்பிற்காக ஆறு விண்வெளி வீரர்களும் கூடுவார்கள்.

தங்களது பெரும்பாலான நேரத்தை சர்வதேச விண்வெளி மையத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை நிர்வகிப்பதிலேயே அவர்கள் செலவிடுகிறார்கள்.

அதையடுத்து விண்வெளி மையத்தை சுத்தம் செய்வதற்கு, அதிலுள்ள பொருட்களை இடம் மாற்றுவதற்கு ஒரு நாளைச் செலவிடுகிறார்கள். அதேபோல் மற்றொரு நாளை விண்வெளி மையத்தின் காற்று சுத்திகரிப்புக் கருவி போன்ற முக்கியமான கருவிகளில் ஏற்படக்கூடிய பழுதுகளைச் சீரமைப்பதில் செலவிடுகிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும் அதை சரிசெய்வது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த விண்வெளி வீரர்களின் முழு செயல்பாடும் அமைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒருவர் அனுப்பப்படுவதற்கு முன்பு, அவருக்கு பூமியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே விண்வெளி நிலையத்தினுள் மிதந்துகொண்டே இருக்கும். ஆகையால் புதிதாக இங்கு வரும் வீரர்கள் தாங்கள் வைத்த பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே தங்களது தொடக்க நாட்களைச் செலவிடுகிறார்கள்.

விண்வெளி வீரர்கள் எப்போதும் மிதந்துகொண்டே இருப்பார்கள். ஆனால், அதை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் உள்ளார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

விண்வெளி வீரர்களுக்கு நீண்ட கால அளவில் பார்க்கும்போது பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் குறிப்பிட்ட காலத்தைச் செலவிடும்போது அவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் குறித்து ஆராய்வது சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் எதிர்காலத் திட்டத்திற்கு இதன்மூலம் கிடைக்கும் அனுபவங்கள் பயன்படும்.

ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண்வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகத் தெரிய வந்துள்ளது. அதோடு தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலிமையை இழந்துவிடுவதாகவும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது. இத்தகைய உடல்ரீதியான பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு விண்வெளி வீரரும் விண்வெளி நிலையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண்வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகத் தெரிய வந்துள்ளது. அதோடு தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலிமையை இழந்துவிடுவதாகவும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

இத்தகைய உடல்ரீதியான பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு விண்வெளி வீரரும் விண்வெளி நிலையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
விண்வெளி வீரர்களுக்கு சாப்பிட என்ன கிடைக்கும்?

பூமியில் இருப்பவர்களைப் போலவே விண்வெளி வீரர்களின் நாட்களும் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி இரண்டு பேர் சேர்ந்தோ அல்லது சிறு குழுவாகவோ பணியாற்றுகிறார்கள்.

வார நாட்களில் எப்போதாவது ஒருமுறைதான் அனைத்து வீரர்களும் இணைந்து ஒன்றாக மதிய உணவு உன்கிறார்கள். வார இறுதி நாட்களில் அனைத்து வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து பேசிக்கொண்டு உண்கின்றனர்.

விண்வெளியில் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும். ஆகையால், வீரர்கள் பூமியில் இருந்து அனுப்பப்படும் பழங்களை உடனடியாக உண்டுவிடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கான உணவிலும் பெரிய வேறுபாடு உள்ளது.

எடுத்துக்காட்டாக ரஷ்ய விண்வெளி வீரர்கள் டின்களில் அடைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு சூடாக்கிவிட்டுச் சாப்பிடுகின்றனர்.

பூமியில் இருப்பதைப் போன்றே தக்காளி சாஸ், கடுகு, மிளகாய் போன்றவை அங்கும் உள்ளது. ஆனால், உப்பு, மிளகு ஆகியவற்றின் துகள்கள் ஓரிடத்தில் மிதக்கும் என்பதால் நீர்ம நிலையில் அடைக்கப்பட்டுக் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பூமியில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படும்போதும் வீரர்களுக்கு பழங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. பூமியைவிட விண்வெளியில் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும். ஆகையால், வீரர்கள் பழங்களை உடனடியாக உண்டுவிடுகின்றனர்.

ஒரு வேலையைத் தொடர்ந்து முற்றிலும் வேறுபட்ட சூழலில் மேற்கொள்வது வீரர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். அதனால் பழங்களை அனுப்புவது, குழுவாகச் சாப்பிடுவது, சிறப்பு தினங்களைக் கொண்டாடுவது போன்ற செயல்பாடுகள் விண்வெளி வீரர்களின் மன ஆரோக்கியத்தைப் பேணும் முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது போன்ற விண்வெளித் தேடலுக்கு விண்வெளி நிலையம் சோதனைக்கூடமாக விளங்குகிறது.

பூமியில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைவிட விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் தனித்துவமான ஆய்வுகளைச் செய்வதற்காகவே சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒருவர் அனுப்பப்படுவதற்கு முன்பு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பரிசோதனைகள், கருவிகள் செயல்பாடு குறித்து பூமியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சிக் கூடங்கள் உள்ளன. ரஷ்யாவுக்கு சொந்தமாக இரண்டு சிறிய ஆராய்ச்சிக் கூடங்களும் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானுக்கு சொந்தமாக தலா ஒரு ஆராய்ச்சிக் கூடமும் உள்ளன.

விண்வெளியில் இருந்து பூமியைப் படம் பிடிப்பது, தரவுகளைத் திரட்டுவது உள்ளிட்ட பணிகளோடு ஒரு செல் உயிரிகள், எறும்புகள், மீன், புழுக்கள் ஆகியவற்றை பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது உட்பட்ட பல்வேறு நாடுகளின் வருங்கால விண்வெளித் தேடலுக்கு இந்த விண்வெளி நிலையம் சோதனைக்கூடமாகவும் விளங்குகிறது.

விண்வெளி நிலையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வேலை பெரும்பாலும் விண்வெளி நிலையத்திற்கு உள்ளேயேதான் இருக்கும் என்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின்போது அதற்கு வெளியே சென்று பழுது நீக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

இத்தகைய மறக்க முடியாத அனுபவமும் சில நேரங்களில் அவர்களுக்குக் கிடைப்பதுண்டு. இதுபோன்ற ஆபத்தான பணிகள் குறித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திட்டமிடப்படுகிறது.

ஒரு வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்வதற்காக வெளியே செல்வதாக இருந்தால், அப்படி வெளியே செல்வதற்கு முன்னதாக பிரத்யேக விண்வெளி ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். அதோடு சுமார் நூறு பக்கங்களைக் கொண்ட பாதுகாப்பு வழிமுறைகளைச் சரிபார்க்க நான்கு மணிநேரம் ஆகும்.

அதுமட்டுமின்றி, பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுபோன்ற பணிகளை இரண்டு வீரர்கள் இணைந்து மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் வெளியே சென்றால் அதிகபட்சம் எட்டு மணிநேரத்தை விண்வெளி நிலையத்திற்கு வெளியிலேயே செலவிடுகிறார்கள்.

இதற்காக விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பாக, பூமியில் மிகப்பெரிய நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி நிலையத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.

பூமியின் ஆச்சர்யமளிக்கும் வடிவத்தை புகைப்படம் எடுப்பதை விண்வெளி வீரர்கள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் முடிந்த பிறகு, மீதமுள்ள நேரத்தைத் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுவதற்கு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துகொண்டே தங்களது குடும்பத்தினருக்கு அழைக்கலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், திரைப்படங்களையும் பார்க்கலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் டிராங்க்விலிட்டி (Tranquility) என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து கண்ணாடி வழியாக விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பது, விண்வெளி வீரர்களின் பொதுவான பொழுதுபோக்காக உள்ளது.

அதுமட்டுமின்றி பூமியின் ஆச்சர்யமளிக்கும் வடிவத்தையும் அதிலுள்ள குறிப்பிட்ட நகரங்களையும் காடுகளையும் புகைப்படம் எடுக்கிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிட்டார் இசைத்ததுடன் இசை காணொளி ஒன்றையும் தயாரித்த கிறிஸ் ஹார்ட்ஃபீல்ட் என்ற விண்வெளி இதுநாள் வரை பிரபலமானவராக அறியப்படுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.