ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம்!! (PHOTOS)
ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம்
பிரபல சங்கீத வித்துவானும் ஓய்வு பெற்ற இசை ஆசிரியருமாகிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்குக் கலாசாலையில் கௌரவம் வழங்கப்பட்டது
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டை ஒட்டி நடைபெற்று வரும் வாராந்த ஒன்று கூடல் சிறப்புரை தொடரில் கடந்த வியாழக்கிழமை 31.08.2023 ஓய்வுபெற்ற இசை ஆசிரியரும் கலாசாலையின் பழைய மாணவருமாகிய பொன் ஸ்ரீ வாமதேவன் உரையாற்றினார்
இதன் போது அவர் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மிக்கவர்களாக சேவையாற்ற வேண்டும் என்றும் பெற்றோர் , பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் தாமாகவே உணர்ந்து ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்களாக கேட்டு கௌரவத்தை பெற்றுக் கொள்வது அழகல்ல என்றும் தெரிவித்தார். இன்று பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரிய தினம் ஆசிரியர்களாலேயே ஒழுங்கு செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கலாசாலையின் மூத்த விரிவுரையாளர் பொ சற்குணநாதன் அதிதி அறிமுக உரையை ஆற்றினார்
நிகழ்வை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்.