இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை 50% அதிகரித்த இந்தியா!!
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்திய அரசாங்கம் (GOI) அதிகரித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (01) அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டத்தின் (HICDP) கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்பது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய HICDP கட்டமைப்பின் கீழ் 60 க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்களை இந்தியா நிறைவு செய்துள்ளதுடன், மேலும், 20 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
HICDP கட்டமைப்பு 2005 இல் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது, பின்னர், ஒவ்வொரு முறையும் ஐந்து ஆண்டுகளுக்கு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.