ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து!!
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.