அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி முதலீட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் – துஷ்யந்தன். உ| விசேட செவ்வி!!
நேர்காணல்: R.M.HIRU
மன்னார் அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் – துஷ்யந்தன். உ விசேட செவ்வி!!
*மன்னார் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டின் மறைக்ப்பட்ட பக்கம்!!
*நாட்டின் தற்போதைய நிலையில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்!
காற்றாலைகள் மூலமான மின் உற்பத்திச் செயற்பாடுகள் அவசியமானவையே ஆனால் நாட்டின் கனியவளங்களை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். வன்னி யுத்த பூமியாக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் பிற்புலத்தில் இவ் நிகழ்ச்சி நிரல் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில் அனைவரும் ஒன்றுபடவேண்டும். எழுத்தாளர், இலங்கை-இந்திய மகாயான பவுத்த தத்துவ செயற்பாட்டாளர், சிவில் சமூக செயற்பாட்டார் என்று பன்முக ஆளுமையாளரான துஷ்யந்தன் உலகநாதன் அதிரடிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
கேள்வி: சிறிய இடைவெளிக்குப் பின்னர் மன்னார் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டின் உங்களின் அவதானிப்பு என்னவாக உள்ளது?
பதில்: மன்னார் மாவட்டம் எனக்கு புதிதில்லை, மன்னார் காற்றின் சக்கதியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு உகந்த பிரதேசங்களில் ஒன்றாகக் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உலக வங்கி குழு இணைந்து கடந்த மாதம் வரைபடம் மற்றும் அது தொடர்பான “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” ஆவணத்தினை வெளியீட்டிருந்தனர். மன்னார் மாவட்ட மக்கள் 2019 தொடக்கம் காற்றாலைகளை மன்னார் தீவுக்குள் அமைக்க வேண்டாம் என கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டனர். இன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட 15MW மின் உற்பத்தி திட்டம் மக்கள் குடியீருப்புக்கு அருகாமையில் நிறுவியுள்ளார்கள். குறித்த நறுவிலிக்குள மக்கள் இதற்கு எதிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். பல தமிழ்,சிங்கள ஊடகங்களில் காணக்கூடியதாகவிருந்தது.
கேள்வி: 15MW காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் நறுவிலிக்குளம் கிராம மக்களிற்கு ஏற்பட்ட பிரச்சனை இன்றுவரை தீர்க்கப்படாத போதும் அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
பதில்: ஆம், முதலில் மக்களைக் குறைகூறுவதை மின் உற்பத்தி திட்டக் குழுவோ, ஏனையவர்களோ நிறுத்த வேண்டும். திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட இடமே பிரச்சனையாகவுள்ளதுடன், காற்றாலை கோபுர விசையாழிகளால் ஏற்படும் ஒலி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அத்துடன் நிறுவப்படும் போது சுற்றுச்சூழல் அறிக்கை கவனத்தில் கொள்ளபட்டதா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது. இது பாரிய தவறு பொறுப்பானவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும். அத்துடன் பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலை கோபுரங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதே மக்கள் கேரிக்கையாகவுள்ளது. மக்கள் தொடர்ந்தும் குறித்த தனியார் கம்பனிக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களிடமும் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்துள்ளனர்.
கேள்வி: பொருளாதார நெருக்கடிகள் தீவிரமாகிக்கொண்டிருக்கின்ற காலத்தில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புதுப்பிக்க சக்தி திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவின் ஆர்வம் எவ்வாறு?
பதில்: இது முக்கியமான விடயம் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிர்க்கும் வேளையில் உதவிய நாடுகள் தங்பொழுது வள ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக கடல்உணவுப் பண்னைகள், புதுப்பிக்க சக்தி திட்டங்கள், எரிவாயு எண்ணெய் மற்றும் துறைமுகங்கள் என்ற விதத்தில் பாரிய அளவில் சர்வதேச நாடுகளின் கைப்பற்ற எண்ணியுள்ள தன்மை வெளிப்படையாகியுள்ளன அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, அமேரிக்கா, ஜேர்மனி, கொரியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் போட்டித்தன்மைகள் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பிக்க சக்தி திட்டங்களில் இந்தியாவின் தனியார் கம்பனியான அதானி குழுமம் வடக்கில் அவர்களது திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளனர். மன்னார் மாவட்டத்திலும், இலங்கையிலும் அதானி குழுமத்திற்கு எதிர்ப்புக்கள் வலுப்பெற்றவண்ணம் உள்ளது. நெருக்கடியான சூழலில் நாட்டின் கனியவளங்களை தனியாருக்கு விற்கப்படுவதை நாம் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம்.
கேள்வி: ஏன் அதானி குழுமத்திற்கு விற்பதை தென்னிலங்கையினர் கூடுதலாக எதிர்க்கின்றனர்?
பதில்: அதானி குழுமத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் அவ் நாட்டவர்களே எதிர்க்கின்றார்கள். அதானி குழுமம் என்பது ஒரு தனியார் கம்பனி அதனால் கௌதம் அதானி மற்றும் அவரது கம்பனியிற்கே இலாபங்கள் சேர்க்கப்படுகின்றமையும், இலாபங்களிற்காக பாரிய அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியவர்கள் என்பதனால் தென்னிலங்கையினர் எதிர்க்கின்றனர். அத்துடன் வட கிழக்கிலும் மக்கள் எதிர்கின்றனர். ஆனால் வடக்கு குறிப்பாக வன்னி தேர்தல்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்புதெருவித்ததாக அறியவில்லை.
உண்மையில் இவ்வாறு தனியார் கம்பனிகளுக்கு நாட்டின் கனிய வளத்தினை வழங்கக்கூடாது. அதானி கம்பனி தனது முதலீடுகளை வேறுவிதத்திலும் நடைமுறைப்படுத்தலாம். இலங்கையில் உள்ள கம்பனிகளின் ஊடாக கூட தமது செயற்பாடுகளை மறைமுகமாக மேற்கொள்ள முடியும் எனவே தான் நாங்கள் நாட்டின் கனியவளங்களை தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்க வேண்டாம் என்கின்றோம். நல்ல உதாரணம் மன்னார் நானாட்டான் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட ‘நறுவிலிக்குளக் கிராமத்தில் அமைக்கப்பட்ட 15MW காற்றாலை மின் உற்பத்தி செயற்பாட்டில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சமூக மற்றும் சூழல் அக்கறை’ எனவே எதிர்வரும் பாரிய முதலீடுகளில் பாரிய அளவிலான சேதங்கள் பாதிப்புக்கள் வரலாம் என அச்சம் கொள்ளவேண்டிய தன்மையில் இவ் செயற்திட்டத்தினை எதிர்க்கவேண்டும்.
இலங்கையர் என்ற வகையில் நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தலான ஒப்பந்தங்கள் செயற்பாடுகள் முதலீடுகளை எதிர்ப்போம் மற்றும் மன்னார் தீவிற்குள் அமைக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்களினால் தீவு தரை கீழ்பகுதி சேதமாக்கப்பட்டால் தீவு அழிவடையும் அபாயமும் உள்ளது. நாடுகளுக்கிடையிலான நட்புறவு செயற்பாட்டு திட்டங்கள் மூலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கனியவள முதலீடுகள் மேற்கொள்ளபட்டால் நன்மைகள் நாடுகளுக்கு கிடைக்கும். இது தொடர்பாக சட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். எனவே இது தெடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள் தமது சுயநல அரசியல் இலாபங்களையே அடைய முயற்சிக்கின்றனர்.
கேள்வி: பொருளாதார நெருக்கடிக்குள் உள்ள இலங்கை மீள காற்றாலை மின் உற்பத்தி என்ற இலக்கினை இலங்கை அடைந்து கொள்ளவேண்டும் என உலக வங்கி குழுமம் இலங்கை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது மற்றும் தொழில்வாய்ப்புக்களும் உருவாகும் எனவும் கூறப்படுகின்றது இருப்பினும் ஏன் எதிர்கின்றார்கள்?
பதில்: நான் முதலில் கூறியபடி நாட்டின் கனியவள சக்தியினை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதை இலங்கையர்கள் அனைவரும் எதிர்கின்றனர். முன்பு கூறியபடி தனியார் கம்பனிகள் தங்கள் இலாபங்களிற்காக எதனையும் செய்வார்கள் உலக வங்கி குழுவின் காற்றின் ஊடாக மின் உற்பத்திக்கான சாலை வரைபடம் மற்றும் ஆவண வெளியீட்டில் பக்கம் 169 இல் குறிப்பிட்ப்பட்ட பங்குதாரர்களுக்காக பகுதியில் தனியார் கம்பனிகளை தேசிய அரச சாரா அமைப்புக்கள் என்ற வகையில் குறிப்பிட்டிருப்பது பிழையான விடயம் மாயையினைத் தோற்றுவித்து வளங்கள் சூரையாடப்படவுள்ளதனை காட்டுகின்றது.
எனவே தான் மக்கள் சர்வதேசத்தினை தற்போது நம்புவதாக இல்லை. தொழில் வாய்ப்பு என்ற விடயத்தின் ஊடாக பாரிய உணவு உற்பத்தியில் தாக்கம், சனத்தொகையில் தாக்கம், வாழ்வாதாரங்களில் மாற்றம், நிலக்கீழ் நன்நீரில் மாற்றம், மீன்பிடி போன்ற பாராம்பரிய தொழில்களில் மாற்றம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் தாக்கம், விவசாய வேளான்மையில் மற்றும் பாரிய ஒரு மாற்றத்திற்கு சமூகம் தயாராக வேண்டிவரலாம். சமூக பிரள்வுகளினால் ஏற்படவுள்ள தாக்கங்களும் அதிகமாக ஏற்படவாய்ப்புக்கள் உள்ளன.
நீங்கள் நினைக்கலாம் ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது மக்கள் எதிர்த்தார்கள் ஆனாலும் ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. அது போல இவ் விடயத்தினை மக்கள் நோக்கினால் தவறு அதானி குழுமம் அனைத்து அன்றாட செயற்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தலாம். வரிவிலக்களிப்புக்களும் தனியார் கம்பனிகளுக்கு நல்ல வருவாயினை கொடுக்ககும் நாட்டிற்கு இலாபம் கிடைக்கும் தன்மை சந்தேகத்திற்குரியதே.
பொருளாதார நெருக்கடி; ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது, பணவீக்கம் தற்பொழுது குறைவடைந்து காணப்படுவதால் முதலீடுகளின் ஊடாகவே நெருக்கடியினை முகம்கொடுக்ககூடியதாக இருக்கலாம்.
கேள்வி: வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது அதிகரித்துள்ள மதம் சார் முரண்பாடுகளை எவ்வாறு பார்கின்றீர்கள்?
பதில்: இலங்கையர்கள் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, இரக்கம் கொண்டவர்கள் நீங்கள் கூறிய மதம் சார் முரண்பாடு சிலரது அரசியலிற்காகவும் முதலீட்டாளர்களின் இட சுவீகரிப்பு செயற்பாட்டிற்காகவும் நடைபெறுகின்றவையாகவே நான் இதனை பார்க்கின்றேன். இதில் முக்கியமாக மக்கள் ஒன்றிணைய கூடாது என்ற எண்ணம் மேலோங்கிக் காணப்படுகின்றது. வன்னி பிரதேசமானது விடுதலைப்புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு யுத்தம் மேற்கொண்டு இலங்கை இராணுவத்தால் போர் முடிவுக்கு கொண்டுவந்த பிரதேசமாகும். உண்மையில் புலிகளின் காலத்தில் மத, சாதி முரண்பாடுகளை தவிர்த்தார்கள்.
தற்பொழுது வடக்கு, கிழக்கில் எந்த மாவட்ட மக்களினை உங்கள் மாவட்ட பிரச்சனை எது என கேட்டால் அவர்கள் பெரும்பாலும் மத முரண்பாடுகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன். இது சிந்தனை ஆற்றலை குறைத்துள்ளது. தனியார் கம்பனிகள் தங்கள் முதலீடுகளையும் சில சுவீகரிப்பையும் மேற்கொள்ள மத முரண்பாடுகள் உதவுகின்றது என்கின்றேன். சில டயஸ்போறாக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களும் மத முரண்பாடுகள் அதிகரிப்பதனை விரும்புகின்றன.
கேள்வி: யுத்த வெற்றி 2009 ஏற்பட்டது பின் ஏன் கிட்டத்தட்ட 14வருடங்களின் பின் முதலீடுகள் மற்றும் கனியவள சக்தி என்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? ஏன் 14 வருடகாலம் கழித்தும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் இவ் முதலீடுகள் வருகின்றன?
பதில்: 2002 சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003 புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பாக அமேரிக்கா, Cairn India, Bell Geospace-UK மற்றும் நோர்வே நாடுகள் ஆய்வு செய்தனர். 2003 வாஷிங்டன் தலைமையாக கொன்ட அமேரிக்க அமைப்பு ஆய்வு ஆவணத்தினை வெளியீடு செய்துள்ளனர். காலம் கனிய காத்திருந்துள்ளார்களோ? எதற்கும் உரிய காலம் வரும் வரைக்கும் காத்திருப்பதனால் முழுமையாக இலக்கினை அடையமுடியும் என்ற அடிப்படையோ.. மக்கள் சிந்தனைக்கு விடுதல் நல்லது.
கேள்வி: இறுதியாக, இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை விடயத்தில் அதன் இராஜதந்திரம் தோல்வி கண்டுவிட்டதா?
பதில்: இந்தியா தோல்வி கண்டுள்ளதா? வெற்றிகண்டுள்ளதா? என்பதை விட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகின்ற சொற்பதங்களை மக்கள் சிந்தனைக்கு விடுதல் நல்லது. எனது பர்வையில் இந்தியா தனது நகர்வில் என்றும் தோற்கவில்லை. 01.09.2023 இலங்கைக்கான இந்திய மானியம் வழங்கலினை 50% மாக அதிகரித்துள்ளமையும் முக்கியமானவிடயம் எனலாம்.
இந்தியா, இலங்கை என்பன இரண்டு தனி நாடுகள் என்பதனையும்; நாடுகள் தத்தமது நாடுகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவதே உண்மையானது. இலங்கையர் எவ்வாறு இந்தியாவையோ அல்லது சீனாவினையோ அல்லது அமேரிக்காவினையோ நம்பமுடியும்? இது ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளால் காலம் காலமாக கூறிவந்த வார்த்தை மட்டுமே அத்துடன் இலங்கை தமிழர் இந்திய தமிழர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனரோ? மக்கள் சிந்தனைக்கு விடுதல் நல்லது.
காற்றாலைகள் மூலமான மின் உற்பத்திச் செயற்பாடுகள் அவசியமானவையே ஆனால் நாட்டின் கனியவளங்களை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)
மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)
இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)