மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது!!
மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நாளை திங்கட்கிழமை (04) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.