;
Athirady Tamil News

ஈராக்கில் இன மோதலில் 3 பேர் பலி- ஊரடங்கு அமல்!!

0

ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர். இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர்.

இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார். இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.