உக்ரைன் எடுத்த திடீர் முடிவு: புதிய அணுகுமுறை என்கிறார் ஜெலென்ஸ்கி !!
உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர்க்கால பாதுகாப்பு மந்திரி ரெஸ்னிகோவை பதவி நீக்கம் செய்து, ருஸ்டெம் உமெரோவை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு மந்திரி ரெஸ்னிகோ மீதான பல ஊழல் குற்றசாட்டுகள் எழுந்தமையாலே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை அமைச்சகத்தில் ஒரு புதிய அணுகுமுறை.
நவம்பர் 2021 இல் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் 550 நாட்களுக்கும் மேலாக முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளார்.” என தெரிவித்தார்.
மேலும், இந்த மாற்றம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும், எனவே உமெரோவின் நியமனத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
ரெஸ்னிகோவிற்கு மற்றொரு திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பை ஜெலென்ஸ்கி வழங்கினால், அவர் ஒப்புக்கொள்வார் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெஸ்னிகோவ் தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை என்றாலும், ராணுவத்திற்கான பொருட்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சகத்தில் கொள்முதல் செய்ததில் பல ஊழல்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.